???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறு, குறு தொழில்களை நசுக்கியது யார்? மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:12:45 IST

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ வழித்தடத்தையும் கோயம்புத்தூரில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.
 
பிரதமர் மோடியின் வருகைக்கு ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ட்விட்டரிலும் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நெட்டீசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மோடி வருகையையொட்டி அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது நினைவிருக்கிறதா? பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 இலட்சம் பேர் வேலையிழந்தனர் என்றும் கூறினார். பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.
 
ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்தத் தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக் கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?’ என்று குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...