???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  23:23:59 IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வாக்களிப்பதால் சட்டமன்றத்திலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணிவிட முடியாது என்றும், சரியான வியூகங்கள் அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றிபெறலாம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் போன்று, மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாத காரணத்தால் தான் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும் என்றார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையோடு செயல்பட்டால், 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என ப.சிதம்பரம் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...