![]() |
வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம்Posted : திங்கட்கிழமை, ஜனவரி 18 , 2021 11:23:32 IST
அஞ்சலி பரத்வாஜ் என்ற சமூக செயல்பாட்டாளர் நிதி ஆயோகிடம் வேளாண் சட்டங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். ஆனால் இந்தக் கேள்விக்கான பதிலை தர மறுப்பு தெரிவித்துள்ளது நிதி ஆயோக்.
இதனைச் சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர்களுக்கான நிதிஆயோக் கமிட்டி தனது ஆலோசனைகளை செப்.19ம் தேதியே முடித்து விட்டது. 16 மாதங்கள் சென்று அறிக்கை அனுப்பியது. ஆனால் இந்த அறிக்கை இன்னமும் நிதி ஆயோகின் ஆட்சி மன்றக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. ஏன்? யாருக்கும் தெரியாது, ஒருவரும் பதிலும் சொல்லப்போவதில்லை.
அஞ்சலி பரத்வாஜ் கேட்ட கேள்விக்கும் பதில் மறுக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்ட ப.சிதம்பரம் ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் புதினத்தில் வரும் புகழ்பெற்ற வரிகளான 'curiouser and curiouser' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது விசித்திரம் எப்போதும் விசித்திரம் என்ற பொருள்படும்படி ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
|
|