![]() |
தமிழ்நாட்டிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் - ப. சிதம்பரம்Posted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21 , 2021 12:16:27 IST
பாஜகவின் ஆணவத்தை அடக்க பஞ்சாபை போல் தமிழ்நாட்டிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ப. சிதம்பரம் எம்.பி பேசினார். அப்போது, நான்கரை ஆண்டு காலம் இல்லாமல் தேர்தல் நேரத்தில் காவிரி குண்டாறு இணைப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுவது மக்களை ஏமாற்றும் செயல் என விமர்சித்தார். பாஜகவின் ஆணவத்தை அடக்க பஞ்சாபை போல் தமிழ்நாட்டிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் பேசினார்.
|
|