![]() |
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!Posted : சனிக்கிழமை, பிப்ரவரி 27 , 2021 12:18:25 IST
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், “சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில், நாங்கள் அடுத்த கட்ட வேளையில் தீவிரமாக இருக்கிறோம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக அவர் தேர்தலில் போட்டியிடுவார்.” என்றவர் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்தோடு கைகோர்க்க உள்ளது என்றார்.
|
|