???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு?

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  02:42:31 IST

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தரப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இதற்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும்  இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்  பலர் கோரி வருகின்றனர்.

 

அத்துடன் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண வரம்பு நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

 

இந்நிலையில் தற்போது இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு  கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது.

 

லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820

 தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411

 சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் பரிந்துரைத்து உள்ளது.

 

இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.  “இதுக்கு செத்தே போயிடலாம்” என்பதுபோன்ற கருத்துகள் அதிகம் உள்ளன.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...