???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பட்டியல் சேகரிடம் சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர்!!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2014  02:49:05 IST

 
இயக்குநர் விஷ்ணுவர்தன், நாயகன் கிருஷ்ணா ஆகியோரின் தந்தை பட்டியல்சேகர் தயாரித்த வானவராயன்வல்லவராயன் படம் பல மாதங்களாக வியாபாரம் ஆகாமல் இருந்தது. அந்தப்படத்தின் பெயர் குறித்து மேற்குமண்டலத்தில் எழுந்த சிக்கல்கள் காணமாகவே பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை என்னவென்றால் அந்தப்படம் வியாபாரமே ஆகவில்லையாம். இதனால் அந்தப்படத்தை யாரிடமாவது மொத்தமாக விற்றுவிடலாம் என்று அவர் காத்துக்கொண்டிருந்தாராம். இந்த நேரத்தில் ஏற்கெனவே இரண்டுபடங்களைத் தயாரித்திருக்கும் மருத்துவர்சிவபாலன் என்பவர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு தான் வாங்கி வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமை மட்டும் ஐந்தரைகோடி என்று சொல்ல சிவபாலனும் படம் நன்றாக ஒடும் என்று நம்பி வாங்கிவிட்டாராம். அதன்பின்னர்தான் எதிர்பாராத திருப்பங்கள். எங்கள் படத்தை நம்பி வங்கிய உங்களுக்கு மரியாதை செய்கிறோம் என்று படத்தின் தயாரிப்பாளர் என்றே சிவபாலன் பெயரைப் போட்டு விளம்பரங்கள் கொடுத்தாராம் பட்டியல்சேகர். இதனால் சிவபாலனும் மகிழ்ந்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி அவர் பெயரிலேயே தணிக்கைச்சான்றிதழும் வாங்கிவிட்டார்களாம். இப்போதுதான் வினை தொடங்கியிருக்கிறது. படத்தின் தணிக்கைச்சான்றிதழே சிவபாலன் பெயரில் வாங்கிவிட்டதால் படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பாளராகிவிட்டார் அவர். இதனால் இந்தப்படம் தொடர்பாக இருந்த பாக்கிகள் அவ்வளவையும் அவரே கொடுக்கவேண்டும் என்று வந்துகொண்டிருக்கிறார்களாம். அந்த தொகையைக் கணக்குப் பார்த்தால் சுமார் இரண்டுகோடிக்கு மேல் இருக்கிறதாம். ஏற்கெனவே ஐந்தரை கொடுத்துவிட்டோம். இன்னும் இரண்டைக்கொடுத்தால்தான் அதையும் மீட்கமுடியும் இல்லையேல் மொத்தப்பணமும் போய்விடும் என்று பலரும் சொல்வதைக் கேட்டு தலை கிறுகிறுத்துப்போயிருக்கிறாராம் சிவபாலன்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...