???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரானோ: தமிழகம் 1458; சென்னை 1146! 0 கொரோனாவுக்கு தாவூத் இப்ராஹிம் பலியா? 0 கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு! 0 சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவர் ராமதாஸ் அறிக்கை 0 ஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல் 0 இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் 0 மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்! 0 பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை 0 சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள் 0 மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு! கேரள போலீஸ் நடவடிக்கை! 0 கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு 0 மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர்! மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்!

Posted : வியாழக்கிழமை,   மே   14 , 2020  04:21:53 IST

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேர்த்து, சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார். இது இணையவழி வந்த காணொளி செய்தி. இந்த செய்தியால் கவரப்பட்டார் இயக்குநர் பார்த்திபன். "இந்த செய்தி என்னை பெரிதாக பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன். மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன்." எனகூறி உள்ளார் பார்த்திபன்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...