???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   16 , 2019  22:51:15 IST

17வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் வருகிற ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க எம்.பி. வீரேந்திரகுமார் இன்று புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின், 19ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். வரும் 20 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார். ஜூலை 5 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடரில், ஆதார் அடையாள அட்டை சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...