???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன் - மு. க. ஸ்டாலின் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் 0 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 0 திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2018  07:04:47 IST

தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த கருணாநிதி நேற்று மாலை காலமானார். திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி தமிழக அரசு இன்று அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இன்று காலை தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவை கூடியதும் இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
 
அதனைதொடர்ந்து மக்களவையில் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர். பின்னர் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல்  புதுச்சேரியிலும் சட்டமன்றத்தில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.கர்நாடகத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவையிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...