???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வறுமையை வென்ற தங்க மகன் மாரியப்பன்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   10 , 2016  02:32:41 IST


Andhimazhai Image
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழக வீரர் மாரியப்பன்‌‌. ‌வறுமையை பின்னுக்குத் தள்ளி வெற்றியை வசப்படுத்துவது இயலாத காரியம் அல்ல என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் சாதிப்பார்கள் என்பதை மெய்பித்து காட்டியுள்ளார் சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. சிறுவயதில் விபத்து ஒன்றில் இவரது வலது கால் பாதிக்கப்பட்டது. ஆனாலும், உயரம் தாண்டுதலில் அசாத்திய திறமை கொண்ட அவர் ஓமலூர் அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரனிடன் பயிற்சி பெற்றார்.
 
பெங்களூருவில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். லண்டன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டெலானா 1.74 மீட்டர்தான் தாண்டியிருந்தார்.
 
செங்கல் சூளையில் வேலை செய்து 70 ரூபாய் தினக்கூலி பெற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் மாரியப்பனின் தாய் சரோஜா. தேசிய அளவிலான போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபித்த மாணவர் மாரியப்பன், சர்வதேச போட்டிகளிலும் நிரூபிக்க முனைப்பாக இருந்தார்.
 
பொருளாதார சிக்கல் காரணமாகவே மாரியப்பனால் லண்டன் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து பெங்களூரூவில் உள்ள இந்திய பாராலிம்பிக் கமிட்டி அகாடமியின் பயிற்சியாளர் சத்தியநாராயணனிடன் மூன்று ஆண்டுகளாக உயர்தரமான பயிற்சியை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஜூனியர் உலக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.
 
கிராண்ட் ஃபிரீ தடகளத்தில் 1.78 மீட்டர் உயரத்தை கடந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் தரவரிசையில் முதல் இடத்தையும் பெற்றார். இதே நம்பிக்கையுடன் ரியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தேசத்துக்கு பெருமை சேர்த்தார். பாரலிம்பிக் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...