அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேப்பர் ராக்கெட்: விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   30 , 2022  13:21:22 IST


Andhimazhai Image

மனிதர்களின் பிரச்சினைகளினூடாக வாழ்தலைப்பற்றிய நம்பிக்கையை விதைப்பதே பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ்.

எப்போதும் அலுவலக வேலையில் பிஸியாக இருக்கும் காளிதாஸ் ஜெயராம் (ஜீவா) அப்பாவின் (நாகிநீடு) செல்லப்பிள்ளை. தன் மகனுடன் நீண்ட பயணம் செல்ல விரும்பும் அவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். சிறிய வயதிலேயே தாயை இழந்த ஜெயராம் இளம் வயதில் தந்தையையும் இழந்து அனாதையாகிறார். தந்தையின் கடைசி ஆசைகளை நிறைவேற்றாத குற்றவுணர்ச்சியில் சிக்கித்தவிக்க மனநல ஆலோசகரை நாடுகிறார். இவரைப்போன்றே சிகிச்சை பெற பலர் அங்கிருக்க, அவர்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒவ்வொருவரின் ஆசையையும் நிறைவேற்றப் புறப்படுகின்றனர். இந்த பயணம் அவர்களின் ஆசைகளையும், விருப்பங்களையும், வாழ்க்கை மீதான பார்வையையும் மாற்றியதா என்பதே இந்த சீரிஸின் மீதிக்கதை.

கிருத்திகா உதயநிதி இயக்கி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாஜி, கெளரி கிஷன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். யார் நடிப்பிலும் குறைகாண முடியவில்லை. நேர்த்தியான கதாபாத்திர தேர்வு.

எட்டு எபிசோடுகளும் ஒரே கதைதான் என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது, ஆறாவது எபிசோட்கள் மட்டும் கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்துகின்றன.

கதைக்கு முக்கிய பலம் லொக்கேஷன் தேர்வு. கடலும், நதியும், மலையும் என ஒவ்வொரு காட்சியிலும் அழகும் ரம்மியமும் நிரம்பியிருக்கிறது. இதை ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு மேலும் மெருகேற்றியிருக்கிறது. சைமன் கிங்கின் பின்னணி இசை இதம். பாடல்களும் ரசிக்க வைக்கிறன.

செறிவான வசனத்தின் மூலம் கதையைத் தாங்கிப்பிடிக்கிறார் வசனகர்த்தா அசோக். 'உண்மையை ஒத்துக்காதவங்க கிட்ட பொய்தானே சொல்லனும்' போன்ற யதார்த்தமான வசனங்கள் கதையின் போக்கிற்கு ஏற்ப பொருந்துகின்றன.

'பேப்பர் ராக்கெட்' வாழக்கையை பற்றிய தத்துவார்த்த விசாரணை நடத்துவது போல் தெரிந்தாலும், அதை சரியாக செய்யவில்லை. அதுவே இத்தொடரின் பலவீனம்.

வழக்கமான காதல் காட்சிகளைத் தவிர்த்து, பேப்பர் ராக்கெட் ஒரு குட் ஃபீல் வெப் சீரிஸ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...