???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படித்ததும் கிழித்ததும்- பாகம்-2- பாமரன் எழுதும் தொடர்- 2

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2019  01:21:09 IST


Andhimazhai Image

 

ப்பா…. இந்த தொடர ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சோம்… அவனவனுக்கு பதில் சொல்லி மாளமாட்டேங்குது.

 

“தலைவா…. ! அந்திமழை மூணு நாள் முன்னாடியே வாங்கீட்டேன்…. ஆனா உங்குளுத இன்னும்படிக்கலே…”ங்குது ஒன்னு.

 

“மொதோப் பக்கத்துல இருந்து கடேசி பக்கம் வரைக்கும் பாத்துட்டேன்… ஏன் உங்குளுதக் காணோம்?”ங்குது இன்னோன்னு.

 

ஏம்ப்பா…. போன வாரம் எழுதுன அந்த நூல் விமர்சனம் படிச்சியா?ன்னு கேட்டா….

 

நீங்கதான் நாகார்ஜுனனைப் பத்தி சொல்லீட்டு….  ”மரணக் கிணற்றில் சைக்கிள் ஓட்டிய கதை…. காரோட்டிய கதை…. குறித்தெல்லாம் பின்னர் எழுதுகிறேன்” ன்னு எழுதி இருந்தீங்க… ஓ…. இந்த வாரம் இதோட முடிஞ்சிடுச்சு போல…ன்னு நெனச்சுட்டேன்….அதுக்கப்புறமும் நீங்க கீழேயும் எழுதீருப்பீங்கன்னு யாருக்குத் தெரியும்?ங்குது ஒண்ணு.

 

சாமிகளா….

 

இணையத்துல வர்ற தொடர புத்தகத்துல தேடாதீங்க.

 

புத்தகத்துல வர்றத இணையத்துல தேடாதீங்க.

 

அப்படியே கண்டுபுடுச்சுப் படிச்சாலும் கடைசீல முற்றுப்புள்ளியா…? கமாவா…. ? இல்ல சேலம் சிவராஜ் சித்த வைத்தியரோட விளம்பரமா?ன்னு உத்துப் பாருங்க.

 

ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி சொல்லியே ஆத்தா கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்துரும் போலிருக்கு.

 

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

 

**********

றுபதுகளில் வந்த படமென்றால் ஒரு எம்.ஜி.ஆர் குடித்தால் இன்னொரு எம்.ஜி.ஆர் பாட்டிலுக்குள் இருந்து வெளியே வந்து “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?” என்பார்.

 

“அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்” என்பார் சிவாஜி.

 

எண்பதுகளில் வந்த படமென்றால் “பங்கி அடிச்சேன்டி…. பான் பீடா போட்டேன்டி…” என்பார் ரஜினி.

 

“சிலுக்கோட கையால ஊத்திக் கொடு” என்பார் சிவக்குமார்.

 

இதுவோ….”வா குவாட்டர் கட்டிங்” காலம்.

 

”தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் அபாயம்!” என்கிற காலம் மலையேறி…. “தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடும் அபாயம்” என்று வால்போஸ்டர்கள் அலறும் காலம்.

 

உலகமயமாக்கலுக்குப் பின்னர் துல்லியமாகத் தூண்டிவிடப்படும் நுகர்வு வெறிக்குள் சகலரும் தள்ளப்பட்டுவிட்ட பிறகு  மதுவை எப்படி எதிர்கொள்வது… பெண்கள் மீதான வன்முறையை எவ்விதம் முறியடிப்பது… பெண்ணின் உடையை…. உடலை…. உறவை…. கண்காணிக்கும் கண்ணியிலிருந்து எப்படி விடுவிப்பது…. என இமாலய பிரச்சனைகளின் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கையில் வந்திருக்கும் படம்தான் “நேர் கொண்ட பார்வை.”

 

நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் ஒரே படத்தில் அகப்படாதெனினும் ஒரு வெகுஜன சினிமாவில்… அதுவும் வெகுஜன மொழியில் சிலவற்றையாவது சொல்லிச் செல்கிறது படம்.

 

ரெஸ்டாரண்ட்டுக்கு கூட வருவது… சிரித்துப் பேசுவது… குடிப்பது மட்டுமில்லை…. பாலியல் தொழிலில் ஈடுபடும் தோழியாயினும் சரி…. வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட துணைவியே ஆயினும் சரி…. அவரது அனுமதியின்றி…. அவரது விருப்பமின்றி அத்துமீறுவது அப்பட்டமான பாலியல் வல்லுறவுதான் என்பதை நெத்தியடியாய்ச் சொல்கிறது படம்.

 

பச்சிளம் குழந்தைகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட குழந்தைத் திருமணங்களை  எதிர்த்ததாகட்டும்…. கைம்பெண் திருமணங்களை வலியுறுத்திக் குரல் கொடுத்ததாகட்டும்… பெண்ணினத்தின் கல்வி…. வேலை வாய்ப்பு…. சொத்துரிமை….உடை சுதந்திரம்… என அனைத்திலும் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அடித்து ஆடியவர் தந்தை பெரியார்தான். அவரை வாசித்தவர்களுக்காகட்டும் அல்லது சுவாசித்தவர்களுக்காகட்டும் ”நேர் கொண்ட பார்வை” அவரை நிச்சயம் நினைவூட்டும். (முகநூலில் எழுதிய எனதன்புத் தோழன் கருந்தேள் ராஜேஷின் பார்வைதான் என்னுடையதும்.)

 

அடக்கி வாசித்திருக்கும் நாயகன் அஜித் பெரும் நிறைவைத் தருகிறார். வில்லனாகவே வாழ்ந்திருக்கிறார் பாண்டே.

 

பெண்களுக்கு எதிரான தேவதாசி முறையைக் கண்டித்து கிளர்ந்தெழுந்து அடித்து நொறுக்கிய முத்துலட்சுமி ரெட்டியும்…. தேவதாசி ஒழிப்பு மசோதாவை துணிச்சலுடன் நிறைவேற்றிய நீதிகட்சியும்… அதற்குத் துணை நின்ற பெரியாரும் நிச்சயம் நினைவில் வந்து போவார்கள்.

 

அதைவிடவும்…. தேவதாசி முறையை நீக்கினால் நமது பண்பாடு கலைகளெல்லாம் அழிந்து போகும் என ஒப்பாரி வைத்த… வாழ்நாளெல்லாம் பெண் இனத்துக்கு எதிராக  நின்ற… சத்தியமூர்த்தியின் பெயரை பொருத்தமாக பாண்டே கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருப்பதற்கே ஒரு பாராட்டு விழா வைக்கலாம் தம்பி வினோத்துக்கு.

 

**********

 

முழுசும் நனஞ்சாச்சு….. ஆனா ரஜினிக்கு  இன்னும் முக்காடு எதுக்குன்னுதான் வெளங்குல…. அர்த்த ராத்திரில அறிவிச்ச பண மதிப்பிழப்பை அர்த்தங்கெட்டு ஆதரிச்சதாகட்டும்…. தூத்துகுடி துப்பாக்கிச் சூட்டை துப்புகெட்டு தூக்கிப் புடிச்சதாகட்டும்…. இந்த ஜூப்பர் ஸ்டார் யார் பக்கம்கிறது வெட்ட வெளிச்சம். இப்ப இருக்குற சூழல்ல பழைய ரசிகர்க எல்லாம் பல்லுப்போயி சக்கரை இல்லாம டீ சாப்பிட்டுகிட்டு இருக்காங்க… அதனால இந்த உச்ச ஸ்டார் மட்டுமில்ல அந்த அத்திவரதரே எந்திருச்சு வார்டு வார்டா வந்தாலும் தாமரைக்கு தண்ணி காட்டீருவாங்க தமிழ்நாட்டுல.  இதுல கிருஷ்ணா அர்ஜுனா…ன்னு புலம்பாம…. பேசாம ரஜினி ஒன்னு பண்ணலாம்.

 

ஏற்கெனவே எக்கச்சக்க குட்டிக் கதைக வேற கைவசம் இருக்கு…. புராண இதிகாசங்கள்ல பேஸ்ல வாங்குன பாஸ் மார்க்கும் இருக்கு. அதனால…. ஷூட்டிங் போன நேரம் போக மிச்ச நேரத்த நம்ம உச்சம் உருப்படியாக் கழிக்கனும்ன்னா ஒரு போஸ்ட்டுக்கு அப்ளிகேஷன் போடலாம். அதுதான் நம்ம கிருபானந்தவாரியார் விட்டுச் சென்ற கதாகாலட்சேப போஸ்ட். புராண கதைன்னாலும் அவரைப் போல சுவாரசியமாச் சொல்லுற லாவகமும் வேணும்…. திறமையும் வேணும்.

 

அது மட்டும் உங்குளுக்கு கைவந்துடுச்சுன்னு வைங்க….. அப்புறம் நீங்க வாரியர்(Warrior) மட்டுமில்ல…..

 

வாழும் வாரியாரும் கூட. யோசிங்க ராசா.

 

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...