???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2018  01:43:04 IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 2 அணு உலைகள் உள்ளன. முதலாவது உலையில், நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. 2-வது உலையில், செப்., 13-ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை, மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இவை இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளன. நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் உற்பத்தி நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகளில் இருந்து கிடைத்த மின்சாரமும் குறைந்து விட்டது. அதனால் நெல்லை பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நெல்லை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளதாகவும், தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 14 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மின்வெட்டு நேரத்தையும், நாட்களையும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...