???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆந்திர அரசின் 22 தடுப்பணையால் - தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை.

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   01 , 2017  02:38:21 IST


Andhimazhai Image

கனமழை காரணமாக, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டிய 22 தடுப்பணைகள் நிரம்பியும், தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து சுத்தமாக இல்லை.

 

வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் பாலாற்று நீரை, ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டி தடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாலாறு எப்போதும் வறண்டே காணப்படுகிறது.

 

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நிரந்தர தீர்வுக்காண ஹந்திரி-நீவா திட்டக் கால்வாயை குப்பம் வரை நீடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

 

இதன் மூலம் கர்நாடகத்தில் இருந்து ஆந்திராவுக்குள் நுழையும் பாலாற்று நீர், ஆந்திர மாநிலத்தை விட்டு வெளியேறாத வகையில் புதிதாக மேலும் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

 

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரம் மேலும், உயர்த்தப்பட்டுள்ளது. குப்பத்தில் தொடங்கி வாணியம்பாடி அடுத்த தமிழக எல்லையில் உள்ள புல்லூர் வரை உள்ள 22 தடுப்பணைகளின் உயரம் 5 அடி இருந்தது.

 

இதில் புல்லூர் தடுப்பணை 12 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. மற்ற தடுப்பணைகளின் 18 அடி வரை உயர்த்தப்பட்டது. புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்தி கட்டியதால், வேலூர் மாவட்டத்துக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டிய 22 தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது.

 

தமிழக-ஆந்திர எல்லையில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. ஆனால், தமிழக பாலாற்றில் தண்ணீர் பாயவில்லை. புல்லூர் தடுப்பணையில் நிரம்பி வழியும் சிறிதளவு உபரி நீர் மட்டுமே தமிழக பாலாற்றில் வழிந்தோடுகிறது.

 

தண்ணீர் வரத்து இல்லாததால் பாலாற்றை நம்பி பாசனம் பெற்ற தமிழக விவசாயிகள் கவலையில் உள்ளனர். பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அபாய நிலையை எட்டியுள்ளது.

 

ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு தேவையான பாலாற்று நீரை பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

ஏற்கனவே காவிரி ஆற்றில் அணை மேல் அணை கட்டி கர்நாடகம் வஞ்சித்து வரும் நிலையில் பாலாறும் இனி கானல் நீராகிவிட்டதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் மெத்தனப்போக்கு குடிமக்களைப் பாதிக்கும் என்பதற்கு சம கால உதாரணங்கள் காவிரியும், பாலாறும்.!click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...