???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   19 , 2018  01:30:03 IST

ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு எதிராக நாடெங்கிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதன் எதிரொலியாக பத்மாவத் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. 
 
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மற்றும் தயாரிப்பாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. 
 
பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிய அமைப்புகள் கொடுத்த நெருக்கடிக்கு 4 மாநில அரசுகளும் அடிபணிந்து விட்டதாகவும் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சார்பில் வாதாடப்பட்டது. 
 
இதனையடுத்து பத்மாவத் படத்திற்கு ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் விதித்துள்ள தடைக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...