அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   26 , 2023  09:05:16 IST

கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பெரிய அளவில் அறியப்படாத பலர் இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் இருளர் சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. எவ்வித கல்வி அறிவுமின்றி, உலகம் முழுவதும் சுற்றி, பல விஷ பாம்புகளை இருவரும் நேர்த்தியாக பிடித்து, விஷ முறிவு துறைக்கு சிறந்த பங்களிப்பை இருவரும் வழங்கி வருகின்றனர்.
 
இவர்கள் தவிர திருமணமே செய்யாமல், தனது வாழ்க்கையையே சமூக சேவைக்கு அர்ப்பணித்த ஓய்வுபெற்ற நூலகரான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறையைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த இசையமைப்பாளர் மரகதமணி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதி ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
 
இதேபோல ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...