???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விமர்சனம்- ஒத்த செருப்பு: ஏன் பார்த்திபன் சார் இப்படி பண்றீங்க?

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   23 , 2019  03:28:23 IST


Andhimazhai Image

ஒருவரே படம் முழுக்க நடித்து அவரே அந்த கதையின் இயக்குநராகவும் இருந்து மேலும் அந்த திரைப்படத்தை தயாரிக்கவும் செய்த சாதனையை இந்திய சினிமா வரலாற்றில் பார்த்திபன் முதல் முறையாக செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள். அத்துடன் கொஞ்சம் பிசகினாலும் சொதப்பிவிடும் வாய்ப்புள்ள இந்த படத்தில் பார்வையாளர்களை ஒன்றச் செய்து படத்தை அழகாக நகர்த்திக் காட்டி தன்னையொரு மிகச் சிறந்த கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

 

கொலைப் பழி சந்தேகத்தில் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பார்த்திபன் நகர்த்துவதுதான் இந்த கதை. அவரைத் தவிர பிற பாத்திரங்கள் குரல் மூலமாகவே அறிமுகம் ஆகிறார்கள். ஏழு நம்பர் சைஸ் உள்ள ஒற்றை செருப்பும் படத்தில் நன்றாக நடித்திருக்கிறது...!

 

சினிமா வெறும் காட்சி ஊடகம் அல்ல என்பதையும் ஒலியின் பங்கு எவ்வளவும் முக்கியம் என்பதை இத்திரைப்படம் நிரூபித்துக்காட்டி உள்ளது. படத்தின் பின்னணி இசையை அமைத்த சத்யா மற்றும் சவுண்ட் மிக்சிங் செய்திருக்கும் ரசூல் பூக்குட்டிக்குப் பாராட்டுகள்.

 

சிறுநீர் கழிக்கும் சப்தம் முதல்  வாக்கி டாக்கியின் இரைச்சல் வரை பார்த்திபன் சம்பவங்களை விவரிக்கும்போது அந்த சூழலில் என்ன ஓசைகள் கேட்டிருக்குமோ அதை உணர வைத்திருக்கிறார் ரசூல்.

 

ஒரே அறை அதாவது காவல்நிலையத்தில் கைதிகளை விசாரிக்கும் அறையில் தான் படத்தின் எல்லா காட்சிகளும் நகர்கிறது. பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் ராம்ஜீ கடுமையாக உழைத்திருக்கிறார். பார்த்திபன் தவறுதலாக தண்ணீரை கொட்டிவிடுவார். அந்த தண்ணீரில் பார்த்திபன் பிம்பம் தெரியும் காட்சி. சுவரோடு பார்த்திபன் ஒட்டி நிற்க கடிகாரத்தின் பின்னாலிருந்து பார்த்திபனை காட்டும் காட்சிகள் எல்லாம் கிளாசிக்.ஒலியை  போல ஒளியும் படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

படத்தின் முக்கிய குறை என்பது ஆணாதிக்க சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களை மீண்டும் மீண்டும் பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் என்றும் ஒரு ஆணின் வீழ்ச்சிக்கும் பெண்தான் காரணம் என்ற கருத்தை இந்த திரைப்படமும் விதைத்திருக்கிறது. பார்த்திபன் மிக அழகாக புதிய முயற்சியாக படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்.. ஆனால் கதையையும் கொஞ்சம் புதிதாகச் சொன்னால்தான் என்ன?

 

’குத்து விளக்கு-க்கு புடவை கட்டியதுபோல்  இருந்தாள்.. கிளப்புக்கு கூட்டிவந்ததால்தான் அவளது மனம் சலனப்பட்டது. 2000 ரூபாய் பணத்தை பார்த்ததால்தான் அவளுக்கு சிரிப்பு வந்தது’ என்பதெல்லாம் பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் சித்தரிப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை!

 

ஒரு புதிய முயற்சியை செய்ய வேண்டும் என்று பார்திபன் நினைக்கிறார் . தனது படத்தை சந்தைப்படுத்த புதிய புதிய யுக்திகளை அவர்  கையாள்கிறார். ஆனால் பெண்களை சித்தரிப்பதில் மட்டும் ஏன் இந்த பிற்போக்குத்தனம் என்றுதான் புரியவில்லை.

 

-வாசுகி

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...