செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழ்நாட்டில் உருவான ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழ்நாட்டில் உருவான ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
Posted : திங்கட்கிழமை, மார்ச் 13 , 2023 10:48:44 IST
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெல்லி தம்பதியையும் அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும்.
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ‘கில்லர்மோ டெல் டோரோ’ஸ் பினோச்சியோ’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த துணை நடிகராக 'கே ஹுய் குவான்' தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” என்ற திறைப்படத்திற்காக இந்த விருதினை அவர் வாங்கியுள்ளார்.
சிறந்த துணை நடிகையாக 'ஜேமி லீ கர்டிஸ்' தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” படத்திற்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.
|