???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிதையும் அர்த்தசாஸ்திர மூலச் சுவடிகள்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  01:21:29 IST


Andhimazhai Image
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியரை இன்றும் எல்லோரும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம். அவர் அமைச்சராக இருந்து ஸ்தாபித்த சந்திரகுப்தனின் மௌரிய சாம்ராஜ்யம்!
 
அர்த்த சாஸ்திரத்தின் அசல் ஓலைச்சுவடிகள் மைசூரில் உள்ள கிழக்கத்திய ஆராய்ச்சி கல்வி நிலையத்தில் இருந்த ஓலைச்சுவடிகளின் குவியலில் இருந்து 1905-ல் ருத்ரபட்னா ஷாமாசாஸ்த்ரி எனும் நூலகர் கண்டுபிடித்தார். அவற்றை அவர் பதிப்பித்தார். ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
 
ஆனால் அர்த்தசாஸ்திரத்தின் அசல் ஓலைச்சுவடி போதிய பராமரிப்பின்றி இப்போது சிதையும் நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. இது வருந்ததக்க விஷயம் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
 
மௌரிய சாம்ராஜ்யத்த்தின் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரமானது அரசாட்சி, இராணுவ தந்திரங்கள், அரசியல், பொருளாதாரம், நீதி, ஆட்சியாளர்களின் கடமைகள் ஆகியவை குறித்து விளக்கும் நூல்.
 
அர்த்தசாஸ்திர சுவடிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை இந்தியாவின் அரசாட்சிமுறை, இராணுவ நிர்வாகம் ஆகியவை கிரேக்க முறையை பின்பற்றி அமைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பிவந்தது. அதுமட்டுமின்றி, 16-ஆம் நூற்றாண்டில் நிக்கொலோ மாக்கிவெல்லி எழுதிய ‘தி ப்ரின்ஸ்’ தான் உலகின் மிக பழமையான அரசியல் தத்துவம் என அதுவரை நம்பபட்ட கருத்தையும் அர்த்தசாஸ்திரம் மாற்றியமைத்தது. இத்தகைய சிறப்புவாய்ந்த அர்த்தசாஸ்திர ஓலைச்சுவடிகள் இப்போது சிதைந்து வருகின்றன.
 
 
மைசூரு உடையார் மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 1916-ஆம் ஆண்டிலிருந்து மைசூரு பல்கலைகழகத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டது. இதன்மூலம் இங்கு சுமார் 70,000 அசல் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டன.
 
கடந்த 2012-இல் அமெரிக்க அரசு இந்த கட்டடத்தை புனரமைக்க 50,000 டாலர் வழங்கியது. இதேபோல் ஃபோர்ட் அறக்கட்டளை அர்த்தசாஸ்திரம் பாதுகாப்படும் அறைக்கு குளிர்சாதனங்களையும், வெப்பத்தை தக்கவைக்கும் இயந்திரங்களையும் அளித்தது. ஆனால் அவையும் பழுதாகி இப்போது பயனளிக்கவில்லை.
 
 உரிய பராமரிப்பின்றி கிடக்கும் அர்த்தசாஸ்திர ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஏற்கெனவே, கடந்த 1996, 1998-யில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே, முதற்கட்டமாக ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மின்சார கம்பிகளை புதுப்பிக்க வேண்டும், அர்த்தசாஸ்திர ஓலைச்சுவடிகளை நவீன மின்னணு முறையில் ஆவணப்படுத்த வேண்டுமென்பது பல்வேறு ஆய்வாளர்களின் முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது.
 
ஏற்கனவே இச்சுவடிகள் மின்னணு வடிவுக்கு மாற்றப்பட்டுவிட்டன. என்றாலும் அசல் ஓலைச்சுவடியின் நிலை மோசமாகத்தான் இருக்கிறது. இதன்மீது அரசு உடனடியாக கவனம் செலுத்தாவிட்டால் அர்த்தசாஸ்திரத்தின் அசல் பிரதிகளை முழுவதுமாக இழக்க நேரிடும் என்பது அவர்கள் சொல்லும் எச்சரிக்கை.
 
அர்த்தசாஸ்திரம் மட்டுமல்ல... அங்குள்ள தமிழ் உள்ளிட்ட மேலும் பல சுவடிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கும். கவனம் தேவை!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...