???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  23:40:33 IST

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஓபிஎஸ் மகனின் பெயர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி இங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில், கோவிலுக்கு உபயம் அளித்தவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் வாக்கு எண்ணிக்கையே நடைபெறாத நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரை எப்படி தேனி எம்.பி. என கல்வெட்டில் எழுதலாம் என எதிர்கட்சியினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...