???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி : மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம் 0 தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் மனு 0 கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 0 கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி 0 தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: காவல்துறை வாகனம் தீ வைத்து எரிப்பு 0 துப்பாக்கி தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்காந்தி பொளேர் 0 தூத்துக்குடி பெருந்துயரத்துக்கு யார் காரணம்? ப.சிதம்பரம் விளாசல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 0 ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: விஜய் சேதுபதி கடும் கண்டனம் 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது 0 தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு 0 பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னை கட்டாயப்படுத்தினார்கள்; அவமானப்படுத்தினார்கள்: மவுனம் கலைந்தார் ஓ.பி.எஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   07 , 2017  11:37:22 IST


Andhimazhai Image
             காபந்து முதலமைச்சராக இருக்கும்  ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடத்துக்கும் மேலாக திடீர் தியானத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சில முக்கிய விஷயங்களை நாட்டு மக்களுக்கும் அதிமுக கழக தொண்டர்களுக்கும் தெரிவிப்பதாக கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது,என்னை அழைத்து மதுசூதனனை பொதுச்செயலளாராகவும் என்னை முதல் அமைச்சராகவும் இருக்குமாறு கூறினார். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றவே தொடர்ந்து பதவியில் இருந்தேன். வருவாய் துறை அமைச்சராக இருக்கும் ஆர். பி. உதயகுமார், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என பேட்டி கொடுத்தார். இதுகுறித்து சசிகலாவிடம் நான் தெரிவித்தேன். ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது வேறொருவரை முதலமைச்சராக நியமிக்கச் சொல்வது நீதி, நியாயத்திற்கு, தர்மத்திற்கு சரிதானா? என்றுகேட்டபோது ஆர். பி. உதயகுமாரை அழைத்து கண்டிப்பதாக சசிகலா தெரிவித்தார். சட்டத்துக்கு புறம்பாக இப்படி பேசுகிறாரே என என்னிடம் சொன்ன செல்லூர் ராஜுவு மதுரை சென்று சசிகலா முதலமைச்சராக வேண்டும் என சொன்னார். தம்பிதுரையும் சொன்னார். என்னை அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாநாட்டு மக்கள் சாதனைவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஆட்சியை தரவேண்டும் என உறுதியாக இருந்தேன். வேறுபாடு இல்லாமல் பொறுப்போடு கட்சி சீனியர்கள் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னை உட்கார வைத்துக்கொண்டு அவமானப்படுத்தினார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்தால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என் மனநிலை பாதிக்கப்பட்டது. பொறுமையாக இருந்தேன். சரித்திரத்தில் வேறுமாதிரி உருவகப்படுத்திவிடும் என பொறுமையாக இருந்தேன். நான் முதலமைச்சராக செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலூட்டியது.
 
எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது எனக்குத் தெரியாது. அங்கு எல்லோரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். எண்ணெய் கசிவு குறித்த நேரடி ஆய்வுக்கு சென்றுவிட்டு போயஸ் இல்லத்திற்குச் சென்றேன். அங்கே இருந்தவர்கள் சின்னம்மா முதலமைச்சர் ஆவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். போயஸ் இல்லத்தில் நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஆகிவிடுவேன்.. அம்மா ஆன்மா இருக்கிற இடத்தில் சொல்கிறேன். தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இதையெல்லாம் தெரியபடுத்துகிறேன். மக்கள் விரும்புகிறவர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும். எதிர்கால நலனுக்கு அதுதான் நல்லது. ஓ.பி. எஸ் அல்ல யாரோ ஒருவர் ஆளலாம். அதிமுக வைக் காப்பாற்ற தன்னந்தனியாக இருந்து போராடுவேன். இயக்கத்தின் தொண்டர்கள் விரும்பினால், மக்கள் விரும்பினால் , சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் மீண்டும் முதல்வராவேன்".


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...