???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   17 , 2018  23:07:22 IST

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அந்த வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 
 
ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை காலதாமதப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்து 3 மாதங்களாகியும் விசாரணையை ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளவில்லை? அதன் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும், இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது எனவும்  கேள்வியெழுப்பட்டது. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டிருப்பதால் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...