அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   17 , 2023  14:03:13 IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16 -ம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின. இந்தநிலையில், 5-வது நாள் அலுவலுக்காக இன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் இன்றைய தனது அலுவலைத் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழங்கள் எழுப்பத் தொடங்கினர். பல உறுப்பினர்கள் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் சபையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து, சபாநாயாகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் அவை இயங்க அனுமதிக்குமாறு வலுயுறுத்தினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், இன்றைய அலுவல்களுக்காக மாநிலங்களவை காலையில் கூடியது. அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கன்னட நடிகரும், எம்பியுமான ஜக்கேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் அவை உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களையில் எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. எனவே வரும் திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அதானி விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பார்லிமென்ட் வளாகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அக்கட்சி எம்.பி., ராகுல்காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...