???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்திய அரசு தேர்வு நடத்துவதற்கு கண்டனம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   05 , 2019  02:06:17 IST


Andhimazhai Image
மாநில அரசுப் பணிகளுக்கு அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
 "இந்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை திசம்பர் 4 – 2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுப் பணிகளுக்கும் அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தவிருப்பதாக முன்மொழிவை வைத்துள்ளது.
 
இந்திய அரசு அமர்த்தும் ஒரு நிறுவனத்தின் வழியாக இப்போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மாநில அரசுகள் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தி, தனது மாநிலத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டுமென அந்த அறிவிக்கை கூறுகிறது.
 
தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டு இளைஞர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
 
இந்நிலையில், அத்தேர்வையே இந்திய அரசின் நிறுவனம் நடத்தும் என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளை வெளி மாநிலத்தவர் மயம் ஆக்குவதற்கான சதித்திட்டமாகும்! மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு நடத்தியிருக்கும் தமிழர் பகைத் திட்டத்தைப் பார்த்து வருகிறோம்.
 
மேலும், நிறுவனங்களின் பணியமர்த்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உரியவாறு செயல்படுத்தப்படுவதில்லை என்ற குறைபாடும் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. இச்சூழலில், இந்திய அரசு நிறுவனமே அத்தேர்வை நடத்தும் என்றால், மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படும்.
 
எனவே, தமிழ்நாட்டுப் பணிகளை வெளியார் மயமாக்கும் தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்புகளை மறுக்கும் இந்த அறிவிப்பை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு வலுவாக மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...