???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எகிறும் வெங்காயத்தின் விலை....ஆம்லேட்டில் முட்டைகோஸ்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   27 , 2019  07:18:56 IST


Andhimazhai Image

வெங்காய பஜ்ஜி சாப்பிடலாம் என்று ஓட்டலுக்குப் போனால் ஏமாற்றம் தான் காத்திருக்கிறது! வாழைக்காய் பஜ்ஜி தான் உள்ளது என்கிறார்கள்! வெங்காயம் விற்கும் விலையில் ஓட்டல்கள் இந்த பஜ்ஜியைப் போடுவதை நிறுத்திவிட்டன. வெங்காய விலை ஏற்றத்தால் உணவகங்களின் உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 ‘வெங்காயத்தின் விலை உயர்வால் ’ஆனியன் ஊத்தப்பத்தம்’ கூட காணாமல் போய்விட்டது! இன்றைய தினம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 90ல் இருந்து 100 ரூபாய் வரை உள்ளது!

 

’வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ.90 முதல் 120 வரை விற்கப்படுகிறது. இதனால் 3 முதல் 4 கிலோ வெங்காயம் தேவைப்படும் இடத்தில் 2 கிலோ வாங்குகிறோம். வடைகளில் குறைந்த அளவில் வெங்காயம் பயன்படுத்துகிறோம். சமோசாக்களில் சுத்தமாக வெங்காயம் பயன்படுத்துவதில்லை’’ என்று கூறுகிறார் ஒரு தேநீர்க்கடை உரிமையாளர்.

 

திருமணத்திற்கு விருந்து தயாரிக்க விலை அதிகமானாலும் வெங்காயம் தேவைப்படுகிறது என்று தேடினால் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.

 

 ‘மதுரையில் இருக்கும் உணவகங்கள் ஒரு நாளைக்கு அரை டன் வெங்காயம் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது அது 300 கிலோவாக குறைந்துள்ளதாம். மேலும் வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் தற்போது ஒரு  ஆம்லேட் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.

 

கடந்த பத்து ஆண்டுகளில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயை இங்கே கடப்பது இப்போதுதான். சென்னையில் சில இடங்களில் சில்லறைக் கடைகளில் 120 ரூபாய்க்கு விற்கிறது.

 

மகாராஷ்டிரா, கர்நாடகா போன்றவை அதிகம் வெங்காயம் விளையும் மாநிலங்கள். கோயம்பேட்டிற்குவரும் வெங்காயத்தில் பெரும்பகுதி நாசிக்கில் இருந்தும் பெல்லாரியில் இருந்தும் வரும்.

 

ஆனால் இங்கு கடும் மழை காரணமாக உற்பத்தி வீழ்ந்துவிட்டது. மத்திய அரசு 1.2 லட்சம் டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளது. விலையைக் கட்டுப்படுத்த இதன் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இன்னும் இரு வாரங்களாவது இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது வரை… அவிச்ச முட்டை சாப்பிட வேண்டியதுதானா? அப்போ ஆம்லேட்?

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...