???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெங்காயத்தால் கோடீஸ்வரர் ஆன ஏழை விவசாயி!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   16 , 2019  05:24:57 IST


Andhimazhai Image
கர்நாடகத்தில் கடனால் வருந்திக்கொண்டிருந்த ஏழை விவசாயி ஒருவர் வெங்காய விலை ஏற்றத்தால் இப்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
 
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த விவசாய மல்லிகார்ஜுனா. 42 வயதான சாதாரண விவசாயியான இவர், போதிய வருமானம் இல்லாமல் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தார்.
 
ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் முதலீடு செய்து வெங்காயம் பயிர் செய்யும் மல்லிகார்ஜுனா, அதில் சில லட்சங்களை மட்டுமே லாபமாக எடுப்பார். அதிலும் பலநேரம் சிக்கல் ஏற்பட, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தார் மல்லிகார்ஜுனா. இந்த ஆண்டும் அதேபோன்ற நிலைதான் இருக்குமென நம்பிக்கையின்றி இருந்த அவருக்கு அடித்தது ஜாக்பாட்.
 
நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணைத் தொட, மல்லிகார்ஜுனாவின் தோட்டத்தில் விளைந்த வெங்காயம் கோடிக்கணக்கில் விலை போயிருக்கிறது. அவர் இந்த ஆண்டு மொத்தம் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்திருக்கிறார். வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்குமேல் விலை போவதால், மல்லிகார்ஜுனாவின் வெங்காயம் கிட்டதட்ட இரண்டரை கோடிகளை ஈட்டியுள்ளது.
 
இதன்மூலம் தனது கடன்களையெல்லாம் அடைத்துவிட்ட மல்லிகார்ஜுனா, "புதிய வீடுகட்ட முடிவுசெய்திருக்கிறேன், இன்னும் அதிக நிலங்களை வாங்கி விவசாயத்தை மேம்படுத்த போகிறேன்" என்கிறார். ஆனால், மல்லிகார்ஜுனாவின் குடும்பத்தினருக்குதான் இப்போது பொறுப்பு கூடியிருக்கிறது. தங்களது தோட்டத்தை வெங்காய திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது பாவம்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...