???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போலீசாரை வாபஸ் பெறாவிட்டால் கிராமத்தை விட்டு வெளியேறுவோம்: கதிராமங்கலம் மக்கள்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  05:51:03 IST

கதிராமங்கலத்தில் முகாமிட்டுள்ள போலீசார் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறுவோம் என அப்பகுதி மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்னும் ஜாமீனில் வெளிவரவில்லை.

 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கதிராமங்கலம் அய்யனார் கோயிலில் பொதுமக்கள் தினமும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க மாணவர்கள் வந்து செல்கின்றனர். இதை தடுக்கும் விதமாக கதிராமங்கலத்தின் எல்லைகளான திருக்கோடிக்காவல், சிவராமபுரம், கொடியாலம் ஆகிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு, ஊருக்குள் வரும் மாணவர்களை மறித்து அவர்களை விசாரித்து, எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

மேலும், ஊருக்குள் மக்களின் நடமாட்டத்தை உளவுப்பிரிவு போலீசார் கண்காணித்து அரசுக்கு தவறான தகவல்களை தந்து வருகின்றனர். எனவே கதிராமங்கலத்தில் முகாமிட்டுள்ள போலீசார் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற நேரிடும் என்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...