அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   26 , 2020  05:35:18 IST

இந்தியாவின் தற்போதைய தேவை ஒரே தேசம்; ஒரே தேர்தல் தான், அது வெறும் விவாதப் பொருள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் அரசு நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல அதுதான் இந்தியாவுக்கான தற்போதைய தேவை.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்திற்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். தனித்தனி பட்டியல் நேரம் மற்றும் வளங்களை வீணடிக்கும் செயல். நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கச் செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...