![]() |
இந்த காய்கறி விலை கிலோ ஒரு லட்சமாம்!Posted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 02 , 2021 14:10:10 IST
![]()
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரேஷ் சிங் என்ற இளம் விவசாயி தான் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரல். ஹாப் ஷூட்ஸ் என்ற அரிய காய்கறி வகையைப் பயிரிட்டதாலேயே அவருக்கு இந்த வெளிச்சம் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஹாப் ஷூட்ஸின் விலைதான். ஒரு கிலோ விலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
|
|