அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் மக்கள் சார்பில் ‘தளபதி விஜய் குருதியகம்’ தொடக்கம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   06 , 2022  15:58:39 IST

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் சமூகவலைதள பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய "தளபதி விஜய் குருதியகம்" என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றோம்.


இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும், பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.


"தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" விலைமதிப்பற்ற பல உயிர்களைக் காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ ட்யூப், இணையதளம் (Facebook, Instagram, Twitter, Youtube Channel & Website) பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


மற்றபடி, இன்றைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் அனைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை மாவட்ட தளபதி விஜய் சிறப்பித்துள்ளனர். எங்கள் பக்கத்தில் வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது; மற்றும் பக்கத்தின் நிறை குறைகளை, பின்னூட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டினால் எங்கள் சேவைகளை மேலும் சிறப்பிக்க உதவியாக இருக்கும்.


அன்பார்ந்த பத்திரிக்கை நண்பர்களே, இந்த செய்தியையும் மற்றும் இந்த செயலியின் சேவை மூலம் அனைத்து மக்களும் பயன்பெறவும், இந்த செய்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து உதவ வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...