???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீரில் பாஜகவுக்கு இடமளித்தது யார்? மெகபூபா - ஓமர் மோதல்!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  05:30:22 IST


Andhimazhai Image
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்  முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி இருவரும்  ஹரி நிவாஸ் எனும் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அரசியல் எதிரிகளான இந்த இரு முன்னாள் முதல்வர்களும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டாலும் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் ஓமர் அப்துல்லா வேறு விருந்தினர் இல்லத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 
காஷ்மீரில் பாஜக வேரூன்றியதற்கு யார் காரணம், என்பது தொடர்பில் இருவருக்குள் விவாதம் எழுந்திருக்கிறது.
 
அப்போது, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேசியுள்ளனர். மெகபூபா முப்தியை தாக்கி பேசிய உமர் அப்துல்லா, "மறைந்த முன்னாள் முதல்வரான உங்கள் தந்தை முப்தி முகம்மது சையது தான் 2015 முதல் 2018 வரை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார்" என பேசியுள்ளார்.
 
மறுபுறம் வாதம் செய்த மெகபூபா முப்தி, "உங்களது தந்தை பரூக் அப்துல்லா தான் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தார். நீங்களும் இணையமைச்சராக இருந்தீர்கள்" என கூறியுள்ளார்.
 
இந்த மோதலைத் தொடர்ந்து ஓமர் அப்துல்லா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ராணுவத் தரப்பிலிருந்து கசிய விடப்பட்டிருக்கும் தகவலாகும்.

English Summary
omar abdulla and mehbooba mufti fight

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...