???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை!- மருத்துவமனை 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   17 , 2019  21:59:39 IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிர நடைபெற்றுவருகிறது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர் மோடி, கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
 
அதற்காக, மோடி, ஹெலிகாப்டரில் சம்பால்பூர் சென்று இறங்கியதும், அவரது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது.
 
ஒரு நபர் அமைப்பு விசாரணைக்குப் பிறகு, மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோஹசின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படவில்லை. சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்புள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒடிசாவில், அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டரிலும் சோதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...