???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சத்துணவு முறைகேடு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து

Posted : புதன்கிழமை,   ஜுலை   11 , 2018  23:59:20 IST

நாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் என ஆண்டுக்கு 100 கோடி அளவில் தமிழக சத்துணவு திட்டத்துக்கான முட்டை சப்ளை செய்வதற்கு அரசு டெண்டர் கோரி இருந்தது. இதையடுத்து சென்னை தரமணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலகத்தில் டெண்டர் விடும் பணிகள் நடைபெற்றது.
 
இதில் வரி ஏய்ப்பு புகாருக்கு உள்ளான கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களான, கிஷான், சுவர்ண பூமி, நேச்சுரல் நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. முன்னதாக, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கணக்கு காட்டப்படாமல் இருந்த ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்கம் போன்றவைகள் கைப்பற்றப்பட்டது.
 
மேலும் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்நிலையில் முட்டை விநியோகத்திற்கு  டெண்டர் கோரிய 6 நிறுவனங்களையும் தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து 6 நிறுவனங்களும் தாய், சேய் முத்திரை இல்லாமல் விண்ணப்பம் அளித்திருந்ததால், நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...