???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

NPR கணக்கெடுப்பு: 31 கேள்விகளுடன் அரசிதழில் வெளியீடு

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:14:47 IST

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்றன.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 31 கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, தொலைக்காட்சி, கணினி, செல்போன், இரு சக்கர வாகனம், கார்,இண்டர்நெட் வசதி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் திருத்தங்களுடன் அமல்படுத்தப்பட்ட என்பிஆர் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தமிழகம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணி விவரங்களை அரசிதழில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...