???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   16 , 2020  09:21:51 IST


Andhimazhai Image
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. நோய் தாக்கம் பற்றிய ஒவ்வொரு தகவலும் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் சூழலில், டெல்லியில் கொரோனா தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியிருக்கும் நபர் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
 
45 வயதான அந்த நபர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஐரோப்பாவிலிருந்து டெல்லி திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த மார்ச் 1-ஆம் தேதி உறுதியானதிலிருந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை கொரோனா தாக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இரண்டு பேரில் இவரும் ஒருவர்.
 
இதுகுறித்து அச்சமின்றி பேசியிருக்கும் அவர், ”இதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. வழக்கமான வைரஸ் காய்ச்சலை போன்றதுதான் கொரோனா. பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் நமது மருத்துவரை அணுகவேண்டும். சிறந்த கட்டமைப்பை கொண்ட நமது மருத்துவத்துறை, உலக மருத்துவ சேவையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்ட் ஒன்றும் சூரிய வெளிச்சம் புகாத 2x2 அளவு சிறைச்சாலை அல்ல” என்று கூறுகிறார்.
 
தற்போது சிகிச்சை முடிந்து 14 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பபட்டிருக்கும் அவர் மேலும் கூறுகையில், “கடந்த 25-ஆம் தேதி நான் ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பினேன். அதற்கு மறுநாளே எனக்கு வந்த காய்ச்சல், மெல்ல மெல்ல தொண்டை வலி போன்ற தொல்லைகளை கொடுத்தது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வைரஸ் பாஸிட்டிவ் என அவர்கள் சொல்லும்வரை தான் நிலைமை மோசமானதாக இருந்தது.
 
பின்னர் நான் சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, நமது மருத்துவர்கள் குழு சோதித்து நம்பிக்கை அளித்தபிறகு எல்லாமே சரியாக நடந்தது. “நீங்கள் மிகுந்த ஆரோக்கியமானவராக இருக்கிறீர்கள், இருமல், சளி போன்ற தொல்லைகள் விரைவாக நீங்கிவிடும். இது நிச்சயம் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். சாதாரணமாக நமக்கு ஏற்படும் இருமல் சளியைவிட இது சற்று கடினமாக இருக்கும் அவ்வளவுதான்” என மருத்துவர்கள் கூறியது என்னை தைரியமாக நோயை எதிர்கொள்ள வைத்தது.
 
நான் ஒன்றும் பெரிய மருத்துவன் அல்ல. ஆனால் கொரோனாவை எதிர்கொண்ட அனுபவத்தில் சொல்கிறேன், வழக்கமான இருமல் சளி காய்ச்சலை ஒத்ததுதான் இது. சப்தர்ஜங் மருத்துவமனையில் அரசு அமைத்திருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளைவிட சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்பதுதான் நிஜம். எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டிருந்தது” என்று நிறைவாக சொல்கிறார். கொரோனா வைரஸ் மிகவும் எச்சரிகையுடன் அணுககூடியதுதான், அதனை வரும்முன் தடுக்க வேண்டியது அவசியம். எனினும் மக்கள் பீதியடைந்து முடங்கிவிடும் அளவுக்கு செல்லவேண்டியதில்லை, உரிய சிகிச்சையை தைரியமாக எதிர்கொண்டால் மீளமுடியும் என்ற செய்தியை வழங்கியிருக்கிறார் அந்த நபர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...