???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   17 , 2018  22:17:23 IST

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.
 
இந்த நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவானது?, ரூபாயின் மொத்த மதிப்பு, போக்குவரத்து செலவு ஆகிய தகவல்களை வெளியிட ஆர்.டி.ஐ மூலம் மனு அளிக்கப்பட்டது.
 
ஆனால், ரிசர்வ் வங்கி வழங்கிய பதில் திருப்தியளிக்காத நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையத்தை மனுதாரர் நாடினார்.
 
இதனை அடுத்து, இது தொடர்பாக பதிலளிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், 500, 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவது என்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது என பதில் அளிக்கப்பட்டது.
 
ரிசர்வ் வங்கியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தகவல் ஆணையம், “500, 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு அச்சடிக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது. ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்க வரம்புக்குள்ளும் இந்த விஷயங்கள் வராது. ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு விபரம், போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும் என கூற முடியாது. எனவே, மனுதாரர் கேட்ட விவரங்களை வெளியிட வேண்டும்,” என்று ரிசர்வ் வங்கிக்கு தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவால் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி எழுந்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...