???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடகிழக்கு பருவமழை 20-ஆம் தேதி தொடங்கும்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:33:12 IST

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்குப் பருவழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டில் ஒரு வாரம் தாமதமாக கேரளாவில் ஜூன் 8-ல் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மாத காலத்தைக் கடந்தும், பருவமழை தொடர்ந்து வந்தது. இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேற்று நிறைவுபெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 1961-ம் ஆண்டில் அக்டோபர் ஒன்றாம் தேதி பருவமழை நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டில்தான் மிகவும் தாமதமாக பருவமழை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் ஓரிரு நாட்களில் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1994-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டில்தான் சராசரியைவிட அதிகமாக, அதாவது 110 சதவீத மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை வழக்கமான நாளான 20-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...