???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீவிரமடைந்தது வடகிழக்கு பருவ மழை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   01 , 2019  00:36:07 IST

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

சென்னையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்துள்ளது.  சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி, அண்ணாசாலை, வேப்பேரி, வடபழனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.  தொடர்ந்து இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.  இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தால் 044௨5384520, 044௨5384530, 044௨5384540 மற்றும் 94454௭7205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...