அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு தொடர்கிறது!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   13 , 2019  10:14:05 IST

குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10-ந் தேதி முதல் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு வரை தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத பிற மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்தால், அது பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்த மாநிலங்களில் கருதுகிறார்கள்.

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் மக்கள் அதை மீறி நேற்றும் போராட்டங்களை தொடர்ந்தனர். மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. கவுகாத்தியில் பல இடங்களில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மட்டும் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்கிம்பூர், டின்சுகியா, திப்ருகார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான விமான சேவைகள், ரெயில் சேவைகள் ரத்தாகின. கவுகாத்தி, டின்சுகியா, ஜோர்ஹாட், திப்ருகார் உள்ளிட்ட இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிராக தொடர்ந்து  போராட்டங்கள் நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு இணைய சேவை மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது. ஷில்லாங்கில் சில இடங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...