அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   28 , 2020  06:13:40 IST


Andhimazhai Image

பாலிவுட்டின் அன்றைய காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த டிம்பிள், தற்போது உலகை கலக்கும் திரைப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வர இருக்கும் ‘டெனட்’ படத்தில் பணிபுரிந்துள்ளார்.  

ரிஷிகபூர் நடிப்பில் 1973-ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ’பாபி’ படத்தில் நாயகன், காதல் பாடல்கள் என அனைத்தையும் தாண்டி 16-வயது பெண்ணான டிம்பிள் கப்பாடியா நாட்டில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பிரபலமானார். பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவுடனான திருமண வாழ்க்கையில் கசப்பை சந்தித்த டிம்பிள், சில ஆண்டுகளுக்கு பின் பிரிந்து மீண்டும் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 1980-களில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து பல கமர்ஷியல் படங்களிலும், கலை படைப்புகளிலும் நடித்து ஒரு நல்ல நடிகையாக தன் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். டிம்பிள் கப்பாடியா தமிழில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சலாமியா நாட்டின் இளவரசியாக நடித்துள்ளார்.

இப்போது ‘டெனெட்’ படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

”நோலனுடைய படங்களில் ப்ரெஸ்டீஜ் (2006) படத்தை தான் முதன்முதலில் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு என் மூளையே வெடித்து விட்டது. நான்கு முறை அந்த படத்தை பார்த்துள்ளேன், நான்காவது முறை தான் படம் சற்று புரிந்தது. அதன்பின் எனது மருமகனை அழைத்து உனக்கு படம் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த படத்தைப் பார். இது உன்னை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னேன்.  எனக்கு தெரிந்து எல்லா நடிகர்களுக்கும் நோலனுடன் இணைந்து பணிபுரியும் ஆசை இருக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது, கடவுளுக்கு நன்றி” என்கிறார் டிம்பிள்.

“பூர்வி லாவிங்கியா என்ற பெண் என்னை அழைத்து டெனெட் படத்தின் ஆடிஷன் பற்றி சொன்னார். நான் அதை நம்பவில்லை. இதைப்பற்றி நான் என் மருமகனிடம் சொல்லி யார் கிறிஸ்டோபர் நோலன்? என்று கேட்டேன்.நான் அவர் பெயரை மறந்தே போயிருந்தேன்.  அவர் சொன்னார், உங்களுக்கு பிடித்த இயக்குனர்! என்று. ஆடிஷன் நெருங்க நெருங்க, பதட்டமடைந்து பல காரணங்களை தேடி அதிலிருந்து வெகு தொலைவில் ஓட நினைத்தேன்.

எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என உறுதியாக இருந்தேன். எனவே, நோலனுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால்அதில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாபி என் முதல் சிண்ட்ரெல்லா தருணம் என்றால் இது என்னுடைய இரண்டாவது சிண்ட்ரெல்லா தருணம்.” என்று சொல்கிறார்.

‘ஜெஃப்ரி குர்லாண்ட் என்பவர் தான் எனது பிரியா கதாபாத்திரத்திற்கு தேவையான ஆடைகள், அணிகலன்கள் என அனைத்தையும் வடிவமைத்தார். இவை அனைத்தும் நோலன் மேற்பார்வையில் உருவானது. மும்பையிலிருந்து நான் அவரோடு போனில் தொடர்பு கொண்டபோது, என் தலைமுடியின் நிறத்தை பார்க்க விரும்பினார். அது எப்போது செம்பொன் நிறத்திலிருந்து பழுப்பு நிறத்திற்கு மாற வேண்டும் என அனைத்தும் அவரால் கண்காணிக்கப்பட்டது.

அவரது ஆற்றல், திரைப்படத் தயாரிப்பில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் அவர் அதில் எடுக்கும் முயற்சி ஆகியவற்றை என்னால் நம்ப முடியவில்லை. முழு படப்பிடிப்பிலும் அவர் கொண்டிருந்த ஆற்றல் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. அதுவே முழு குழுவினரையும் உற்சாகப்படுத்தியது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட்டோம். எங்களுக்கு சிறந்த நடிப்பை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை’


டெனெட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  சோனம் கபூர் உள்ளிட்ட சில நடிகர்கள் ட்விட்டரில் டிம்பிள் கப்பாடியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பிரியா கதாபாத்திரத்திற்க்கான வரவேற்பை பற்றி பேசிய அவர்,  ’நோலனின் பிரியா கதாபாத்திரத்தைப் பொருத்தவரை அனைத்தும் நோலன் மட்டுமே, அதில் நான் பிரத்யேகமாக ஏதும் செய்துவிடவில்லை’ என்று கூறியுள்ளார்.

லண்டன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள டெனெட் படத்தில் உலகளாவிய அளவில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிட்டிஷ் நடிகர்கள் ராபர்ட் பாட்டின்சன், மைக்கேல் கெய்ன் மற்றும் கென்னத் பிரானாக்,ஆஸ்திரேலிய நடிகரான டெபிகி, அமெரிக்கரான வாஷிங்டன் என பலர் நடித்துள்ளனர்.

 

கிறிஸ்டோபர் நோலனின் மற்ற படங்களை போலவே ’டெனெட்’ படத்திலும் புதியதொரு அறிவியல் கோட்பாட்டை பற்றி பேசியுள்ளார். ‘டைம் இன்வெர்ஸன்’ என்ற அறிவியல் கோட்பாட்டின் மூலம் காலத்தை பின்னோக்கி வளைக்கும் சயின்ஸ் பிக்சன் படமாக ‘டெனெட்’ உருவாகியுள்ளது.

டெனெட் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது

 

- சு. கார்த்திக் சுந்தர்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...