அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிமுகவுக்கு 46.8 கோடி நிதி அளித்த டாடா குழுமம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   08 , 2021  01:16:38 IST


Andhimazhai Image




அதிமுகவுக்கு டாடா குழுமத்தின் தேர்தல் அறக்கட்டளை கடந்த ஆண்டு மட்டும் 46.8 கோடி நிதி அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் கடந்த ஆண்டு பெற்ற நிதி வரவுகள் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதில் அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2019 - 2020 நிதியாண்டில் பெற்ற நிதி தொடர்பான தகவல்கள் உள்ளன.

மாநில கட்சிகளின் பட்டியலில் திமுக, அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 20 கட்சிகளின் நிதி வரவு இடம்பெற்றுள்ளது. அதிலுள்ள தரவுகளின்படி அதிமுக பெற்றுள்ள நிதி 52.1 கோடி. இதில் 94% நிதியை (46.8 கோடி) டாடா குழுமத்தின் தேர்தல் அறக்கட்டளை மட்டுமே அக்கட்சிக்கு வழங்கியுள்ளது.

இதேபோல் திமுகவுக்கு 48.31 கோடி நிதி கிடைத்திருக்கிறது. இதில் 93% நிதி தேர்தலுக்கான நிதி ஆதாரங்களின் வழியே அக்கட்சியின் கணக்கில் சேர்ந்திருக்கிறது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 2019 - 2020 நிதியாண்டில் தமக்கு கிடைத்த நிதி ‘பூஜ்ஜியம்’ என தெரிவித்திருக்கிறது. ரூ 20,000-க்கு மேல் வழங்கப்படும் நிதியே கணக்கில் கொள்ளப்படும் என்கிற முறையின்படி பார்த்தால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு யாருமே நிதி அளிக்கவில்லை.

தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த நிதி தொடர்பான பட்டியலில் இரண்டு தேசிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஒன்று தேசியவாத காங்கிரஸ், மற்றொன்று பகுஜன் சமாஜ் கட்சி. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2019 - 2020 ஆண்டில் கிடைத்த நிதி 59.9 கோடி ரூபாய். 2018 - 2019 ஆண்டில் அக்கட்சியால் பெறப்பட்ட 12 கோடியை ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நிதியில் பிஜி ஷிர்கே கட்டுமான தொழில்நுட்ப நிறுவனம் அதிகபட்சமாக 25 கோடி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பன்ஞ்ஷில் கார்பரேஷன் 7.5 கோடி அளித்துள்ளது. கோவிட் 19-க்கு தடுப்பூசி தயாரித்திருக்கும் சிரம் நிறுவனம் 3 கோடி, ஃபினோலக்ஸ் நிறுவனம் 1.25 கோடி வழங்கியுள்ளன. இக்கட்சிக்கு நிதி அளித்திருக்கும் ஒரே தேர்தல் அறக்கட்டளை ஹார்மொனி தேர்தல் அறக்கட்டளை மட்டுமே.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற தேசியக் கட்சிகளின் நிதி வரவு பற்றி இன்னும் பதிவேற்றப்படவில்லை.

டாடா குழுமத்தின் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 25.3 கோடி பங்களிப்பு செய்திருக்கிறது. இந்த அறக்கட்டளை 2019 - 2020 ஆண்டில் அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் 72 கோடி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...