???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி நீர் இல்லை: எட்டாவது ஆண்டாக விவசாயிகள் ஏமாற்றம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   11 , 2019  23:53:57 IST

டெல்டா பகுதி உள்பட 12 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணையில் தற்போது மேட்டூர் அணையில் 50 அடிக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 1000 கன அடிக்கும் குறைவாக இருக்கிறது. இதனால், தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடியை உரிய நேரத்தில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் தர வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களில் காட்டும் அக்கறையை காவிரி நீரை பெற்றுத் தருவதிலும் தமிழக அரசு காட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில் உரிய தேதியில் 15 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 11 முறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், காலதாமதமாக 85 முறை திறக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2011-ம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி திறக்கப்பட்ட அணை அதன் பிறகு ஜூன் மாதங்களில் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியபோது, நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், அணையின் 16 கண் பாலம் வழியாக 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...