செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Posted : சனிக்கிழமை, ஜனவரி 16 , 2021 22:51:49 IST
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2,783 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதற்கட்டமாக இன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், இது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டிய மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை 12 மையங்கள் மூலமும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் மூலமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், முதல் நாளான இன்று 10 பிரபல மருத்துவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், மக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
|