???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   20 , 2018  00:11:42 IST

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 
 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, கும்பல் வன்முறை, பெண்கள் மற்றும் தலித்கள் மீதான தாக்குதல், வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் இன்று விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடதப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தங்களுக்கு போதிய பலம் உள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடியும் என்று பாஜக நம்புகிறது. மக்களவையில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தற்போது 10 இடங்கள் காலியாக உள்ளன. சபாநாயகர் தவிர பாஜகவுக்கு 273 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தனது எம்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
 
மேலும் இதில் பெரும்பான்மைக்கு 268 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், பாஜகவுக்கு 273 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸுக்கு 48 உறுப்பினர்களும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 34 உறுப்பினர்களும் உள்ளனர். பாஜக தவிர, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட 147 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவளிக்கின்றனர்.
 
37 உறுப்பினர்களைக் கொண்டுள்ள 2-வது பெரிய கட்சியான அதிமுக, 20 உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால், அரசுக்கு எதிராக இன்று கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...