![]() |
'அரசு மருத்துவர்களுக்கு உயர்கல்வியில் 50% இடஒதுக்கீடு இல்லை' - உச்சநீதிமன்றம்Posted : வியாழக்கிழமை, நவம்பர் 26 , 2020 23:39:19 IST
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் முடிவை உயர்நீதிமன்றம் ஏற்றது. ஆனால், தற்போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
|