???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   06 , 2020  22:03:36 IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 5-வது அலகின் கொதிகலன் கடந்த 1-ந்தேதி திடீரென்று வெடித்துச் சிதறியது.

இதில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 2-வது அனல் மின்நிலைய துணை முதன்மை பொறியாளர் சிவக்குமார்(வயது 53), சி.ரவிச்சந்திரன் (50), செல்வராஜ் (52) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தொடர்ந்து நெய்வேலி 18-வது வட்டத்தை சேர்ந்த நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன்(45), தொப்ளிக்குப்பம் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி இளங்கோ(49), இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம்(48) ஆகியோர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.  இந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பேர் 4 கவலைக்கிடமாக உள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...