???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: நிதின் கட்கரி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   14 , 2019  23:17:08 IST

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
 
அப்போது பேசிய அவர், ‘அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அதற்கு முழு தீர்வு காணப்படும் . காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோதாவரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று பேசினார்
 
மேலும் அவர், சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் தற்போது தடையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் உள்ளிட்டோரிடம் பேசி தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இப்பகுதிக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது.  அதனாலேயே முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்துகிறார்.  8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடுத்த வாக்குறுதி 100% நிறைவேற்றித் தரப்படும். தமிழகத்தில் அதிமுக-பாஐக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். தமிழகம் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம், தொழில் முனைவோருக்கு அதற்கான அடிப்படை கட்டமைப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...