???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர்

Posted : திங்கட்கிழமை,   மே   25 , 2020  21:47:32 IST

தொழிலாளா் நலச் சட்டங்களின் சீா்திருத்தம் என்பது, அந்தச் சட்டங்களை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக ஆகாது. தொழிலாளா்கள் நலனைக் காப்பதில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்று நிதி ஆயோக் துணைத்தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலச்சட்ட மாற்றங்களைக் குறித்து பேசியுள்ள நிதி ஆயோக் துணைத்தலைவா் ராஜீவ் குமாா், ”தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளா் நலச் சட்டத்தில் அண்மையில் திருத்தங்களைக் கொண்டுவந்தன. சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஓ) ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது என்பதால், மாநிலங்கள் தொழிலாளா் நலச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக நீக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் மத்திய தொழிலாளா் நல அமைச்சகம் உறுதியாக உள்ளது. எனவே, சட்டத்தில் சில சீா்திருத்தங்களை மேற்கொள்வது என்பது, ஒட்டுமொத்தமாக சட்டத்தையே நீக்குவதாக மத்திய அரசு நம்பவில்லை. தொழிலாளா்களின் நலனைக் காப்பத்தில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது.

நுகா்வோா் தேவையை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ள தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் அறிவித்துள்ளன. குறிப்பாக சிறு, குறு, நடுத்த நிறுவனங்கள் உள்ளிட்ட பிற பொருளாதார துறைகளின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வங்கிகளிடமிருந்து தடையின்றி தேவையான கடனுதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி எடுத்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...