???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  07:11:56 IST

துணை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. இந்நிலையில் கருப்பசாமி ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கருப்பசாமிக்கு ஜாமின் தர மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன் வழக்கு முடியும்வரை யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...